சினிமா செய்திகள்

'அடி கட்டழகு கருவாச்சி' வீடியோ பாடல் வெளியீடு

யூ ட்யூபில் இதுவரை 2.5 மில்லியன் வியூஸ்களை அள்ளியுள்ளது கள்வன் படத்தின் டிரெயிலர்.இந்நிலையில் படத்தின் பாடலான 'அட கட்டழகு கருவாச்சி' வீடியோ பாடல் வெளியிடப்பட்டுள்ளது.

ஒளிப்பதிவாளர் பி வி ஷங்கரின் இயக்கத்தில் ஜி.வி பிரகாஷ் நடிப்பில் வெளியாக இருக்கும் படம் கள்வன். ஜனவரி மாதம் இப்படத்தின் டீசர் வெளியானது. பாரதிராஜா, இவானா மற்றும் தீனா முன்னணி கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படம் ஏப்ரல் 4 வெளியாகவுள்ளது.

டில்லி பாபு இப்படத்தை தயாரித்துள்ளார். ஜி வி பிரகாஷ் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். ராட்சசன், மரகத நாணயம், முண்டாசுப்பட்டி படத்திற்கு ஒளிப்பதிவு செய்தவர் இப்படத்தின் இயக்குனரான பி.வி.ஷங்கர் என்பது குறிப்பிடத்தக்கது.

படத்தின் டிரெயிலர் கடந்த வாரம் வெளியிடப்பட்டது. படத்தின் டிரெயிலருக்கு மக்களிடையெ மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது. யூடியூபில் இதுவரை 2.5 மில்லியன் வியூஸ்களை அள்ளியுள்ளது கள்வன் படத்தின் டிரெயிலர்.

இந்நிலையில் படத்தின் பாடலான 'அட கட்டழகு கருவாச்சி' வீடியோ பாடல் வெளியிடப்பட்டுள்ளது. இப்பாடல் வெளியானபோதே  மிக ஹிட்டாகியது. தற்பொழுது இப்பாடலின் வீடியோ வெளியிடப்பட்டதால் ரசிகர்களிடம் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இப்பாடலின் வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.

உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.