தென்னிந்திய ஹிப்-ஹாப் இசை உலகத்தை ஒன்றிணைக்கும் “வணக்கம் வணக்கம் பெங்களூர்” ஏப்ரல் 11-ம் தேதி பெங்களூருவில் நடந்தது. இதில் மூன்று மாநிலங்களைச் சேர்ந்த 8-க்கும் மேற்பட்ட கலைஞர்கள் ஒரே மேடையில் பங்கேற்று ரசிகர்களுக்கு அதிரடி அனுபவத்தை வழங்கினர்.
வேடன், காப்ரி, ஸ்டிக், சந்தன் ஷெட்டி மற்றும் டகால்டி ஆகியோரின் உற்சாகமான நிகழ்ச்சிகளுடன் தமிழ் கலைஞர்கள் அறிவு மற்றும் அசல் கோலாரும் சிறப்பு நிகழ்ச்சிகள் வழங்கினர். இவை ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றது.
மலையாளம், கன்னடம், தமிழ் ஹிப்-ஹாப் இசையின் பல்வேறு முகங்களை ஒரே மேடையில் கொண்டு வந்த இந்த விழா, மொழி மற்றும் கலாசார எல்லைகளைத் தாண்டிய இசை ஒன்றிணைப்பாக அமைந்தது. Alt+ மற்றும் The High Culture இணைந்து இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தது.
இதன் அடுத்த பதிப்பு “வணக்கம் வணக்கம் சென்னை” என்ற பெயரில் விரைவில் நடைபெற உள்ளது. ஐதராபாத், மும்பை உள்ளிட்ட நகரங்களிலும், அதன்பின் உலகளாவிய அளவில் பல நாடுகளுக்கு இது விரிவடைய உள்ளது.