சசிகுமார் 
சினிமா செய்திகள்

நான் ஒரு போலீஸ்காரனு பெருமையா சொல்றதா? இல்ல... வெளியானது ‘வதந்தி 2’ வெப் சீரிஸ் டிரெய்லர்

‘வதந்தி 2’ வெப் சீரிஸின் 'டைவா கோட்டிங்' பாடல் துள்ளலான இசையுடனும், அட்டகாசமான காட்சிகளுடனும் இணையதளங்களில் வைரலானது.

'வதந்தி சீசன் 2 - தி மிஸ்டரி ஆஃப் மணி' ஆகஸ்ட் 7 முதல் பிரைம் வீடியோவில் தமிழில் வெளியாகிறது.

எஸ்.ஜே. சூர்யா, லைலா, சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி நடிப்பில் வெளியான வெப்சீரிஸ் ‘வதந்தி’. முதல் பாகம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றதை அடுத்து அதன் அடுத்த பாகம் தற்போது உருவாகியுள்ளது. இந்த முறை சசிகுமார் காவல் அதிகாரியாக நடித்துள்ளார். மிஸ்டரி ஆஃப் மணி என புதிய கதைக்களத்தில் இந்த கதையை இயக்குநர் ஆண்ட்ரூ லூயிஸ் உருவாக்கியுள்ளார்.

முன்னணி தயாரிப்பாளர்களான புஷ்கர்-காயத்ரி தங்களது 'வால்வாட்சர் ஃபிலிம்ஸ்' நிறுவனம் சார்பில் இதன் கிரியேட்டிவ் தயாரிப்பாளர்களாகச் செயல்பட்டுள்ளனர். முதல் பாகத்தில் எஸ்.ஜே.சூர்யா முதன்மைப் பாத்திரத்தில் நடித்திருந்த நிலையில், இரண்டாம் பாகத்தில் பிரபல நடிகரும் இயக்குநருமான 'சசிகுமார்' சப்-இன்ஸ்பெக்டர் மூசா ராசா என்ற அதிரடியான காவலர் கதாபாத்திரத்தில் களமிறங்கியுள்ளார்.

வைரல்

இந்த க்ரைம்-த்ரில்லர் தொடரில் சசிகுமாருடன் இணைந்து, அபர்னா தாஸ், விவேக் பிரசன்னா, யஷ்வந்த், அனகா, ரேவதி சர்மா, அர்ஜுன் நந்தகுமார் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இத்தொடருக்கு 'சைமன் கே.கிங்' இசையமைத்துள்ளார். இந்த சீரிஸின் 'டைவா கோட்டிங்' பாடல் துள்ளலான இசையுடனும், அட்டகாசமான காட்சிகளுடனும் இணையதளங்களில் வைரலானது.

இந்த நிலையில், இதன் டிரெய்லர் வெளியாகி உள்ளது. மதுரையை மையமாகக்கொண்டு எடுக்கப்பட்டுள்ள ‘வதந்தி 2’ டிரெய்லரில் தேசிய நெடுஞ்சாலை திட்டப் பணிகள் நடைபெறும் இடத்தில் மனித எலும்புக்கூடு கண்டெடுக்கப்படுகிறது. அவ்வழக்கு சம்பந்தமாக மணி கைது கைது செய்யப்படுகின்றான். ஆதாரங்கள் மணிக்கு எதிராக இருந்தாலும் காவல் அதிகாரியான சசிகுமார் உண்மையை தேடும் போது வெளிப்படும் மர்மங்கள் சுற்றி கதை நகர்கிறது. சசிகுமார் உண்மையை கண்டுபிடித்தாரா? அதன்பிறகு என்ன என்பதே ‘வதந்தி2’ வெப் சீரிஸின் கதை.

'வதந்தி சீசன் 2 - தி மிஸ்டரி ஆஃப் மணி' ஆகஸ்ட் 7 முதல் பிரைம் வீடியோவில் தமிழில் வெளியாகிறது. மேலும், தெலுங்கு மற்றும் இந்தி டப்பிங் பதிப்புகளுடனும், ஆங்கிலம் உள்ளிட்ட 15 மொழிகளில் சப்டைட்டில்களுடனும் இந்தியா மற்றும் உலகம் முழுவதும் 240-க்கும் மேற்பட்ட நாடுகள் மற்றும் பிராந்தியங்களில் பிரத்யேகமாக ஸ்ட்ரீமிங் செய்யப்படும்.