சினிமா செய்திகள்

Vadhandhi Season 2 | காக்கி சட்டையில் சசிகுமார்... வெளியான அறிமுக வீடியோ!

புதிய சீசன் விரைவில் வெளியாகும் என்று தெரிகிறது.

மாலை மலர்

பிரபல ஓ.டி.டி. தளமான பிரைம் வீடியோ இன்று (வியாழக்கிழமை) தனது வரவிருக்கும் இணைய தொடர்கள் மற்றும் திரைப்படங்கள் குறித்த அறிவிப்பை வெளியிட்டது. இதில் "வதந்தி சீசன் 2" வெளியீடு குறித்த அறிவிப்பு ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

எழுத்தாளர் - இயக்குநர் ஆன்ட்ரூ லூயிஸ் இயக்கத்தில் உருவாகி இருக்கும் "வதந்தி சீசன் 2" தொடரில் சசிகுமார், யஷ்வந்த், அனகா மருதோரா, அபர்னா தாஸ், விவேக் பிரசன்னா, ரேவதி சர்மா மற்றும் அர்ஜூன் நந்தகுமார் ஆகியோர் நடித்துள்ளனர். மேலும், இந்தத் தொடரின் ஃபர்ஸ்ட் லுக் வீடியோவையும் பிரைம் வீடியோ வெளியிட்டுள்ளது.

அதன்படி, தண்டனை பெற்றதன் காரணமாக மதுரையின் வறண்ட புறநகர் பகுதிக்கு மாற்றப்பட்ட பிறகு, உதவி ஆய்வாளர் மூசா ராசா (சசிகுமார்) ஒரு முக்கியத்துவம் வாய்ந்த அரசியல் வழக்கை முடித்து வைக்கிறார். ஆனால், தனது இந்த வெற்றி ஒரு நிரபராதியை ஆயுள் தண்டனைக்கு உள்ளாக்கி இருக்கக்கூடும் என்பதை அவர் உணர்கிறார், இதன் பிறகு என்ன நடந்தது என்பதே இந்தத் தொடரின் கதை ஆகும்.

இந்தத் தொடரை வால் வாட்சர் ஃபிலிம்ஸ் சார்பில் எஸ் குஹபிரியா, எஸ் நந்தகுமார் மற்றும் கவுதம் செல்வராஜ் இணைந்து தயாரித்துள்ளனர். தற்போது அறிமுக வீடியோ வெளியாகி இருக்கும் நிலையில், "வதந்தி சீசன் 2" வெளியீட்டு தேதி குறித்து இதுவரை எந்த தகவலும் இல்லை.