மலையாளத்தில் கடந்த 2024-ஆம் ஆண்டு வெளியாகி பெரும் வெற்றி பெற்ற திரைப்படம் ‘வாழ’. இந்தப் படத்தை பிரபல இயக்குநரும், தயாரிப்பாளருமான விபின் தாஸ் தயாரித்திருந்தார். இவர் இதற்கு முன்னதாக ''ஜெய ஜெய ஜெய ஜெய ஹே'', ''குருவாயூர் அம்பல நடையில்'' உள்ளிட்ட படங்களை இயக்கி இருந்தார்.
சவின் இயக்கிய ‘வாழ’ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, இந்த் படத்தின் இரண்டாம் பாகத்தை இதே இயக்குநர் இயக்கினார். ஏற்கனவே முதல் பாகம் வெற்றி பெற்ற நிலையில், இந்தப் படத்தின் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவியது. இப்படத்திற்கு ‘வாழ 2’ எனப் பெயரிடப்பட்டு கடந்த ஏப்ரல் 2-ஆம் தேதி வெளியானது.
பள்ளிகால கதையாக உருவான இந்தப் படம் ரசிகர்கள் மத்தியிில் நெகிழ்ச்சிப் படமாக அமைந்ததால் இந்தாண்டின் வெற்றிப்படங்களில் ஒன்றாக மாறியது. இந்த நிலையில், ‘வாழ 2’ கேரளத்தில் மட்டுமே ரூ.100 கோடி வசூலித்துள்ளதாக படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. உலகளவில் இந்தப் படம் ரூ.200 கோடி வசூலித்துள்ளது.
இந்தப் படத்தை தமிழ் மற்றும் தெலுங்கில் டப்பிங் செய்து வெளியிடத் தயாரிப்பு நிறுவனம் முடிவு செய்துள்ளது. இதனால், விரைவிலேயே தமிழிலும் இப்படம் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.