மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித் குமார் நடித்து இருக்கும் திரைப்படம் விடாமுயற்சி. படத்தை குறித்த அப்டேட் நீண்ட காலமாக வெளிவராமல் இருந்தது. இந்நிலையில் படத்தின் டீசரை யாரும் எதிர்ப்பார்த்திராத போது முன்னறிவிப்பு ஏதும் இல்லாமல் படக்குழு வெளியிட்டது.
டீசரின் காட்சிகள் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. இத்திரைப்படத்தை லைகா ப்ரொடக்ஷன் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்நிலையில் லைகா ப்ரொடக்ஷன் தயாரிக்கும் அடுத்த திரைப்படத்தை குறித்த தகவல் இன்று மாலை 5 மணிக்கு வெளியாகும் என லைகா நிறுவனம் அறிவித்துள்ளது.
இப்படம் நடிகர் விஜயின் மகனான ஜேசன் சஞ்சய் இயக்கவுள்ள படத்தின் அறிவிப்பாக இருக்கலாம என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.