விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டியில் உள்ள வி.சாலையில் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு பிரம்மாண்டமாக தற்பொழுது நடைப்பெற்று வருகிறது.
மாநாட்டு திடலில் சுமார் ஒரு லட்சம் பேர் அமர்ந்து பார்க்கும் வகையில் இருக்கைகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளனர். இன்னும் சற்று நேரத்தில் நடிகர் விஜய் கட்சி கொடியை ஏற்றவுள்ளார்.
இந்நிலையில், பிரம்மாண்டமாக காட்சி அளிக்கும் மாநாட்டு திடலில் அதிகாலை முதலே பல்வேறு பகுதிகளில் இருந்து தொண்டர்கள் குவிந்து வருகின்றனர். திடலெங்கும் தொண்டர்களின் கூட்டம் நிரம்பி வழிகிறது.
அரசியலில் களம் இறங்கியுள்ள விஜய்க்கு அதன் முதல்படியாக இன்று நடக்கும் முதல் கட்சி மாநாட்டிற்கு பல்வேறு திரைபிரபலங்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், இன்று தனது புதிய பயணத்தை தொடங்கவிருக்கும் விஜய் சாருக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள் என்று நடிகர் சிவகார்த்திகேயன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இன்று நெல்லையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய நடிகை ரெஜினா, "விஜய் வெற்றிகரகமான நடிகர். வெற்றிகரமான அரசியல்வாதியாகவும் வருவார்" என்று அரசியல்வாதியாக களமிறங்கியுள்ள விஜய்க்கு வாழ்த்து தெரிவித்தார்.
இதைத்தொடர்ந்து நடிகர் விஜய் சேதுபதி "தவெக கட்சியின் முதல் மாநில மாநாடு சிறக்க.. தவெக தலைவர் விஜய் சாருக்கும், தொண்டர்களுக்கும் வாழ்த்துக்கள்". என கூறியுள்ளார்.
இதைத்தொடர்ந்து திரைப்பிரபலங்களான கார்த்திக் சுப்பராஜ், வெங்கட் பிரபு, நெல்சன் திலிப்குமார்,ஜெயம் ரவி, பிரசன்னா, ஆர்.ஜே பாலாஜி, அர்ஜூன் தாஸ், அஷ்வத் மாரிமுத்து ஆகியோர் அவர்களின் வாழ்த்துகளை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளனர்.
மக்கள் பணிக்காக புதுப்பயணம் தொடங்கும் அண்ணன் @actorvijay அவர்களுக்கும் தமிழக வெற்றிக்கழகத்தின் தொண்டர்களுக்கும் வாழ்துக்கள். #ThalapathyVijay #TVKVijay #TVKMaanadu pic.twitter.com/IK6YRp3xiw
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.