சினிமா செய்திகள்

'TVK 2026' பைக் நம்பருடன் ரெட்ரோ லுக்: சோஷியல் மீடியாவை கலக்கும் சிபி சத்யராஜின் புகைப்படம்!

இந்த புகைப்படங்களில் மிகவும் சுவாரசியமான விஷயமே அந்த பைக்கின் பதிவு எண் பலகைதான்.

சிபி சத்யராஜின் புதிய திரைப்படத்திற்கான விளம்பர உத்தியா அல்லது ஏதேனும் ரகசிய குறியீடா என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான சிபி சத்யராஜ், சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள புகைப்படங்கள் இணையவாசிகளின் கவனத்தை ஈர்த்து வைரலாகி வருகின்றன. 80-களின் ரெட்ரோ பாணியில் எடுக்கப்பட்டுள்ள இந்த புகைப்படங்களில், அவர் பழங்காலத்து பைக் ஒன்றில் கெத்தாக அமர்ந்திருப்பது போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளன. ஆடை வடிவமைப்பு முதல் சிகை அலங்காரம் வரை அனைத்தும் 80-களின் காலக்கட்டத்தை நினைவுபடுத்தும் வகையில் மிக நேர்த்தியாக உருவாக்கப்பட்டுள்ளன.

ரசிகர்களின் கண்ணில் சிக்கிய 'TVK 2026'

இந்த புகைப்படங்களில் மிகவும் சுவாரசியமான விஷயமே அந்த பைக்கின் பதிவு எண் பலகைதான். அதில் 'TVK 2026' என்று குறிப்பிடப்பட்டுள்ளது ரசிகர்களின் புருவங்களை உயர்த்த வைத்துள்ளது. தமிழக அரசியலில் 'TVK' (தமிழக வெற்றி கழகம்) என்ற பெயர் பெரும் பேசுபொருளாகி வரும் சூழலில், 2026 சட்டமன்ற தேர்தலை சுட்டிக்காட்டும் விதமாக இந்த பதிவெண் அமைந்திருப்பது ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுதியுள்ளது.

புதிய பட அறிவிப்பா?

சமூக வலைத்தளங்களில் இந்த புகைப்படத்தை பகிர்ந்து வரும் ரசிகர்கள், இது சிபி சத்யராஜின் புதிய திரைப்படத்திற்கான விளம்பர உத்தியா அல்லது ஏதேனும் ரகசிய குறியீடா என கேள்வி எழுப்பி வருகின்றனர். மேலும், 80-களின் பின்னணியில் உருவாகும் ஒரு வரலாற்று காலத்து கதைக் களத்தில் அவர் நடிக்கிறாரா என்ற எதிர்பார்ப்பும் திரை உலகில் உருவாகியுள்ளது.

இணையத்தில் குவியும் லைக்ஸ்

சிபி சத்யராஜின் இந்த வித்தியாசமான ரெட்ரோ தோற்றம் அவரது ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. புகைப்படங்கள் வெளியான சில மணி நேரங்களிலேயே ஆயிரக்கணக்கான லைக்ஸ்களையும், நூற்றுக்கணக்கான கமெண்ட்களையும் பெற்று சோஷியல் மீடியாவில் ட்ரெண்டிங் லிஸ்டில் இடம் பிடித்துள்ளது. புகைப்படத்தின் பின்னணியில் உள்ள உண்மைத் தகவலை அறிய ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

SCROLL FOR NEXT