சினிமா செய்திகள்

டிரெண்டாகும் திரிஷாவின் நீல நிற புடவை - ஆன்லைனில் குவியும் ஆர்டர்கள்!

சென்னையில் கடந்த 10-ந்தேதி நடந்த முதலமைச்சர் விஜய் பதவியேற்பு விழாவில், நடிகை திரிஷா கலந்துகொண்டார். விழாவில் திரிஷா கட்டியிருந்த நீல நிற புடவை அனைவரது கவனத்தையும் ஈர்த்தது.

இதற்கிடையில் திரிஷா அணிந்த அதே நிற புடவைகளை ஆன்-லைனில் விற்பனைக்கும் சிலர் கொண்டு வந்துவிட்டார்கள்.

ரூ.1,800 முதல் தொடங்கும் இந்த புடவைகளை பெண்கள் போட்டி போட்டுக்கொண்டு ஆன்லைனில் முன்பதிவு செய்துள்ளனர். இதில் சிலர் விற்பனை செய்த புடவைகள் தீர்ந்து விட்டது என்றும் பதிவு செய்துள்ளனர்.

ஏற்கனவே ஒரு திருமண நிகழ்வில் விஜய்யுடன், திரிஷா கலந்துகொண்டது சர்ச்சையானது. ஆனால் அந்த விழாவில் திரிஷா அணிந்த சந்தன நிற புடவை பேமஸ் ஆனது. அந்த புடவையும் ஆன்லைனில் விற்பனை செய்யப்பட்டதும், அதை பலரும் விரும்பி வாங்கியதும் குறிப்பிடத்தக்கது.