திரிஷா 
சினிமா செய்திகள்

லண்டனில் அஜித் கார் பந்தயத்தை கண்டுகளித்த திரிஷா

மிச்செலின் லீ மான்ஸ் தொடரை முதலமைச்சர் விஜய் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

லண்டனில் அஜித்குமார் பங்கேற்றுள்ள கார் பந்தயத்தை தமிழின் முன்னணி நடிகைகளும் ஒருவரான திரிஷா நேரில் பார்வையிட்டார்

அரசுமுறைப் பயணமாக இங்கிலாந்து சென்றுள்ள முதலமைச்சர் விஜய், தமிழ்நாட்டிற்குப் புதிய முதலீடுகளை ஈர்ப்பதோடு சர்வதேச விளையாட்டு உள்கட்டமைப்புகளையும் நேற்று நேரில் பார்வையிட்டார்.

அதேநேரம் நேற்று லண்டனில் நடிகர் அஜித் குமாரின் அணி பங்கேற்கும் மிச்செலின் லீ மான்ஸ் தொடரை முதலமைச்சர் விஜய் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

சர்வதேச பந்தய வீரராகக் களம் காணும் நடிகர் அஜித் குமார், LMP3 Pro/Am பிரிவில் 'Ajith RedAnt by Virage' அணியின் சார்பாக 16-ஆம் எண் கொண்ட 'Ligier' பந்தயக் காரை இயக்குகிறார். இப்போட்டியில் அஜித் குமாருடன் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த முன்னணி பந்தய வீரர் ரோமைன் வோஸ்னியாக் இணை காரோட்டியாக பங்கேற்றுள்ளார்.

முதலமைச்சர் விஜய்யுடன் இணைந்து அவர் கார் பந்தயத்தை நேரில் கண்டு ரசிக்கும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளன.

நடிகை ராதிகாவுடன் பிரிட்டனில் திரிஷா எடுத்த புகைப்படங்கள் நேற்று வெளியான நிலையில், இன்று அவர் பந்தயத் தளத்திற்குச் சென்றுள்ளார்.

திரிஷா வருகை

இந்த நிலையில் கார் பந்தயம் நடைபெறும் இடத்திற்கு நடிகை திரிஷா நேரில் சென்றுள்ளார். அஜித்தின் அழைப்பின் பேரில் திரிஷா அங்கு சென்றதாகக் கூறப்படுகிறது.

முதலமைச்சர் விஜய் கார் ரேஸை பார்த்து ரசித்து கொண்டிருந்த போது, திடீரென அந்த இடத்துக்கு என்ட்ரி கொடுத்து, ரேஸை பார்த்து நடிகை திரிஷா கண்டுகளித்தார்.

SCROLL FOR NEXT