சினிமா செய்திகள்

2062-ல்தான் நிம்மதியாக தூங்குவேன்- திரிஷா

திரிஷா மனஅழுத்தத்தில் இருப்பதாகவும், தூக்கமில்லாமல் தவிப்பதாகவும் ரசிகர்கள் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

சமீபகாலமாக நடிகை திரிஷா தலைப்பு செய்திகளில் தவறாமல் இடம்பிடித்து வருகிறார். அந்த வகையில் தற்போது அவர் வெளியிட்டுள்ள பதிவு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அவர் வெளியிட்டுள்ள பதிவில், ஒரு மணி நேரத்திற்கு தூக்கத்தை இழந்தால் அதனை ஈடுகட்ட சுமார் 4 நாட்கள் ஆகும். அப்படி கணக்கு பார்த்தால் 2062-ல்தான் நான் நன்றாக தூங்குவேன் என்று பதிவிட்டுள்ளார். அவரது பதிவு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதுமட்டுமின்றி திரிஷா பதிவு குறித்து கடும் விமர்சனங்கள் எழுந்து வருகிறது. திரிஷா மனஅழுத்தத்தில் இருப்பதாகவும், தூக்கமில்லாமல் தவிப்பதாகவும் ரசிகர்கள் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

42 வயதான திரிஷாவுக்கு இன்னும் திருமணமாகவில்லை. அடிக்கடி அவரது திருமணம் குறித்து வதந்திகள் பரவி வரும் நிலையில் சமீபத்தில் தன்னைப் பற்றி வரும் திருமண செய்திகளுக்கு வேடிக்கையாக கருத்துக்களை வெளியிட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.