நடிகை திரிஷா 
சினிமா செய்திகள்

வெப் தொடரில் திரிஷா

நந்தினி ரெட்டி சமீபத்தில் சமந்தா நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற ‘மாஇண்டி பங்காரம்’ படத்தின் இயக்குனர் ஆவார்.

சினிமாவில் தனக்கென தனி இடத்தை பிடித்துள்ள திரிஷா தற்போது புதிய வெப் தொடரில் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

மவுசு

தமிழ் சினிமா ரசிகர்கள் மனதில் இன்றும் ‘டிரீம் கேர்ள்’ ஆகவே வலம் வருபவர் திரிஷா. இளம் தலைமுறையினருக்கு இன்றும் பிடித்த கதாநாயகியாக இருந்து வரும் திரிஷாவுக்கு மவுசு மட்டும் குறையவே இல்லை.

சினிமாவில் தனக்கென தனி இடத்தை பிடித்துள்ள திரிஷா தற்போது புதிய வெப் தொடரில் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. தொடரை நந்தினி ரெட்டி இயக்குவதாக கூறப்படுகிறது.

நந்தினி ரெட்டி சமீபத்தில் சமந்தா நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற ‘மாஇண்டி பங்காரம்’ படத்தின் இயக்குனர் ஆவார். அடுத்ததாக திரிஷா நடிப்பில் வெப் தொடரை இயக்க இருப்பது ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

திரிஷா நடிக்க இருக்கும் இந்த தொடர் இயற்கைக்கு அப்பாற்பட்ட சம்பவங்களை மையமாக கொண்ட திரில்லர் கதையாக உருவாக இருக்கிறது.