கிஷோர் குமார் இயக்கத்தில் சனந்த் ரெட்டி, மடோனா செபாஸ்டியன் நடிப்பில் உருவாகியுள்ள ரொமான்டிக் காமெடி திரைப்படம் ‘ஹார்ட்டின்’.
இப்படத்தில் தமிழ்நாடு முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசின் மகள் இமயா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
உமா பத்மநாபன், பிரகதி, மேத்யூ வெர்கிஸ், ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். படம் வரும் 26ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்நிலையில் இப்படத்தின் டிரெய்லர் வெளியாகி உள்ளது.