சினிமா செய்திகள்

‘Ladies & Ladies’ of Toxic- வெளியானது புது டீசர்

இப்படம் ஆகஸ்ட் மாதம் 26-ந்தேதி உலகளவில் திரையரங்குகளில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மலையாள இயக்குநர் கீது மோகன்தாஸ் இயக்கத்தில், 'ராக்கிங் ஸ்டார்' யஷ் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘டாக்சிக்’. 1940 முதல் 1970 வரையிலான காலகட்டத்தில், கோவாவில் நிலவிய போதைப்பொருள் கடத்தல் மற்றும் மாஃபியா கும்பல்களை மையமாகக் கொண்ட ஆக்ஷன் த்ரில்லர் கதையாக இந்தப் படம் உருவாகியுள்ளது.

இந்தப் படத்தில் நயன்தாரா, கியாரா அத்வானி, ஹூமா குரேஷி, தாரா சுதாரியா, சுதேவ் நாயர், அக்ஷய் ஒபராய் மற்றும் ருக்மிணி வசந்த் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இதனை படக்குழு ஏற்கனவே தனித்தனி போஸ்டர்களை வெளியிட்டு அறிவித்து இருந்தது. இதனிடையே இந்தப் படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டு இருந்தது.

இதனை தொடர்ந்து ‘டாக்சிக்’ படம் கடந்த மார்ச் மாதம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டு சில காரணங்களால் வெளியாகவில்லை. இதையடுத்து இப்படம் அடுத்த மாதம் அதாவது ஆகஸ்ட் மாதம் 26-ந்தேதி உலகளவில் திரையரங்குகளில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், ‘டாக்சிக்’ படத்தின் புதிய டீசர் தற்போது வெளியாகி உள்ளது. டீசரில், இப்படத்தின் கதாநாயகிகளான நயன்தாரா, கியாரா அத்வானி, தாரா சுதாரியா, ஹூமா குரேஷி ஆகியோரை மையப்படுத்தும் வகையில் டீசர் அமைந்துள்ளது. தற்போது வெளியான டீசர் ரசிகர்களின் கவனத்தை பெற்றுள்ளது.

மேலும் இந்த ஆண்டின் மிகவும் எதிர்பார்க்கப்படும் படங்களில் ஒன்று ‘டாக்சிக்’ என்பது குறிப்பிடத்தக்கது.