சினிமா செய்திகள்

Mission: Impossible பட சண்டை காட்சி- கின்னஸ் சாதனை படைத்த டாம் க்ரூஸ்

‘மிஷன்: இம்பாஸிபிள்- தி ஃபைனல் ரெக்கனி’ கடந்த சில தினங்களுக்கு முன்பு வெளியானது. இப்படம் பல மொழிகளில் வெளியாகி வசூல் குவித்து வருகிறது.

பிரபல ஹாலிவுட் நடிகர் டாம் க்ரூஸ். இவரது மிஷன் இம்பாசிபிள் வரிசை படங்களுக்கு உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். டாம் க்ரூஸின் அதிரடியான ஆக்ஷன் காட்சிகளுக்காகவே பிரபலமான அவரது 'மிஷன்: இம்பாஸிபிள்' திரைப்பட வரிசையில் 8-வது பாகமான, 'மிஷன்: இம்பாஸிபிள்- தி ஃபைனல் ரெக்கனி' கடந்த சில தினங்களுக்கு முன்பு வெளியானது.

உலகம் முழுவதும் பல மொழிகளில் வெளியான இப்படம் இந்தியாவிலும் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என பல மொழிகளில் வெளியாகி வசூல் குவித்து வருகிறது.

இந்த நிலையில், 'மிஷன்: இம்பாஸிபிள்- தி ஃபைனல் ரெக்கனி' பட சண்டை காட்சிக்காக நடிகர் டாம் க்ரூஸ் கின்னஸ் சாதனையாளராகி உள்ளார். இப்படத்தில் எரியும் பாராசூட்டில் இருந்து அதிக முறை (16) குதித்த நபர் என்ற சாதனையை தன்வசப்படுத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

SCROLL FOR NEXT