தமிழ்நாடு முதலமைச்சர் விஜய்யின் 52வது பிறந்தநாள் நள்ளிரவு கொண்டாட்டத்தின் போது, நடிகை த்ரிஷா அவருடன் இணைந்து கேக் வெட்டி கொண்டாடியுள்ளார். இதுதொடர்பான புகைப்படங்களை தனது சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளார்.
நேற்று பிறந்தநாள் கொண்டாடிய விஜய்க்கு த்ரிஷா சமூக வலைத்தளங்களில் எந்த வாழ்த்தும் தெரிவிக்காததால், இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக தகவல்கள் வெளியாகின.
மேலும் விஜய்யை இன்ஸ்டாகிராமில் த்ரிஷா அன்ஃபாலோ செய்ததாகவும் கூறப்பட்டது. இந்நிலையில் இருவரும் ஒன்றாக இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார் த்ரிஷா. அதில் விஜய்யின் முன்பு 5 கேக்குகள் உள்ளன.
அனைத்தையும் அர்த்தமுள்ளதாக மாற்றும் நபருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் என கேப்ஷனில் குறிப்பிட்டுள்ளார்.