நகைச்சுவை நடிகராக தொடங்கி, பின் கதாநாயகனாக தன் திரைவாழ்க்கையை தொடர்ந்து வருபவர்தான் நடிகர் சந்தானம். கண்ணா லட்டு தின்ன ஆசையா, வல்லவனுக்கு புல்லும் ஆயுதம், இங்க என்ன சொல்லுது, இனிமே இப்படித்தான் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். கடைசியாக இவர் நடிப்பில் வெளியான படம் டிடி நெக்ஸ்ட் லெவல்.
இதனைத்தொடர்ந்து தற்போது சந்தானம் நடிக்கும் புதிய படத்திற்கு லவ் பைட் என பெயர் வைக்கப்பட்டுள்ளது. செல்வின் ராஜ் எழுத்து மற்றும் இயக்கத்தில் உருவாகும் இப்படத்தை, ஏஜிஎஸ் நிறுவனம் சார்பில் அர்ச்சனா கல்பாத்தி படத்தை தயாரிக்கிறார்.
சந்தானத்துடன் நடிகர்கள் ஆன்ந்த் ராஜ், மொட்டை ராஜேந்திரன், அபர்ணாதாஸ் ஆகியோர் படத்தில் நடிக்கின்றனர். படம் குறித்த பிற தகவல்கள் அடுத்தடுத்து வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.