'முதலும் நீ முடிவும் நீ' படம் மூலம் பிரபலமானவர் நடிகர் கிஷன் தாஸ். இப்படமும், இப்படத்தில் வரும் முதலும் நீ முடிவும் நீ பாடலும் இவரை பிரபலமாக்கியது.
இப்படத்தை தொடர்ந்து கிஷன் தாஸ், சிங்க், தருணம் ஆகிய படங்களில் நடித்துள்ளார்.
இதேபோல், பிரபல யூடியூபரான ஹர்ஷத் கான் பெரிய திரையில் அறிமுகமானார். கடந்த பிப்ரவரி மாதத்தில் வெளியான டிராகன் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்தில் நடித்திருந்தார். இவரது நடிப்புக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது.
இது தவிர விஜே சித்து இயக்கி நடிக்க உள்ள 'டயங்கரம்' என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ள புதிய படத்திலும் நடிக்க உள்ளார் ஹர்ஷத் கான்.
கிஷன் தாஸ், ஹர்ஷத் கான் ஆகிய இருவரும் இணைந்து புதிய படம் ஒன்றில் நடிக்க உள்ளனர். இந்த படத்தை மினி ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்கிறது.
இந்த படத்தை சாரங் தியாகு இயக்குகிறார். சித்து குமார் இசையமைக்கிறார். கவுதம் ராஜேந்திரன் ஒளிப்பதிவு செய்கிறார்.
இந்நிலையில், இப்படத்திற்கான தலைப்பை ப்ரோமோவாக படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். நகைச்சுவையாக படம்பிடித்துள்ள ப்ரோமோ காட்சியில் படத்தின் தலைப்பு வெளியிடப்பட்டது.
இந்த படத்திற்கு 'ஆரோமலே' என்று தலைப்பிடப்பட்டுள்ளது. இந்த கலகலப்பான ப்ரோமோ வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
Happy to release the fun filled promo of #Aaromale starring @kishendas #HarshathKhan @ShivathmikaR, directed by @SarangThiagu https://t.co/tTJbRAqY7OBest wishes to @ministudiosllp @vinod_offl @aditi1231 and the entire team