சினிமா செய்திகள்

அட்டக்கத்தி தினேஷின் புதியப் பட டைட்டில் வெளியீடு!

படத்திற்கு பந்தா கேங்ஸ் என தலைப்பிடப்பட்டுள்ளது.

அட்டக்கத்தி தினேஷ் நடிக்கவுள்ள அடுத்த படத்திற்கு ‘பந்தா கேங்க்ஸ்’ எனத் தலைப்பிடப்பட்டுள்ளது. விசாரணை, இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு படங்களுக்கு பிறகு இப்படத்தில் தினேஷுடன் நடிகை ஆனந்தி இணைகிறார்.

இப்படத்தில் லிங்கேஷ், சமூக ஊடக பிரபலம் ஹரி முனியப்பன் ஆகியோரும் நடிக்கின்றனர்.

தினேஷ் நடிக்கும் 26வது படத்தை அறிமுக இயக்குநர் மதி ஆனந்த் எழுதி, இயக்குகிறார். வி6 ஃபிலிம்ஸ் பதாகையின்கீழ் வேலாயுதம்.எஸ் படத்தை தயாரிக்கிறார். சத்யபிரகாஷ் படத்திற்கு இசையமைக்கிறார்.

தினேஷின் பிறந்தநாளை முன்னிட்டு ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. மற்ற நடிகர்கள் மற்றும் படம் குறித்த பிற அறிவிப்புகள் அடுத்தடுத்து வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

SCROLL FOR NEXT