சினிமா செய்திகள்

‘என்னைக்கு குறையாத மவுசு’ - 10 கோடி பார்வையாளர்களை கடந்த ‘கூலி’ பவர்ஹவுஸ்!

யூடியூபில் கூலி படத்தின் பவர்ஹவுஸ் பாடலின் லிரிக்கல் வீடியோ 10 கோடி பார்வையாளர்களை கடந்துள்ளது.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியானப் படம் கூலி. இப்படத்தில் நாகார்ஜுனா, உபேந்திரா, சத்யராஜ், சௌபின் ஷாஹிர், ஸ்ருதி ஹாசன் மற்றும் ராஷிதா ராம் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.

ஆமீர் கான் கௌரவத் தோற்றத்தில் நடித்திருந்தார். அனிருத் ரவிச்சந்தர் இப்படத்திற்கு இசையமைத்திருந்தார். இப்படம் வணிக ரீதியாக வெற்றி பெற்றது. உலக அளவில் முதல் நாளில் ரூ.151 கோடியையும், முதல் வாரத்தில் ரூ.229.65 கோடியையும் வசூலித்து சாதனை படைத்தது.

இந்நிலையில் இப்படத்தின் பவர்ஹவுஸ் பாடல் இணையத்தில் 10 கோடி பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்துள்ளது. முன்னதாக மோனிகா பெலூசி பாடலும் 10 கோடி பார்வையாளர்களை கடந்து நல்ல வரவேற்பை பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT