சினிமா செய்திகள்

#ThugLife பட நடிகைக்கு மார்பக புற்றுநோய்

எனக்கு கிரேடு 1 மார்பக புற்றுநோய் இருப்பதாக பெற்றோரிடம் சொல்லும் தைரியம் எனக்கு கிடைத்தது. சிகிச்சைக்கு பின் தற்போது நான் நன்றாக குணமடைந்து வருகிறேன்.

கமல்ஹாசன் நடித்த 'தக் லைப்' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமானவர் ராஜ்ஸ்ரீதேஷ்பாண்டே. தொடர்ந்து இந்தி, மலையாளம், மராத்தி என இந்திய அளவில் பிரபல நடிகையாக இருந்து வருகிறார். இந்நிலையில் ராஜ்ஸ்ரீ தேஷ்பாண்டே தனக்கு மார்பக புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், 'வழக்கமான உடல்பரிசோதனையின் போது எனக்கு கிரேடு 1 மார்பக புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. ஆரம்பத்தில் கண்டறியப்பட்டதால் சிகிச்சை எளிதானது. இதை படிக்கும் அனைவருக்கும் சொல்ல வேண்டிய நேரம் இது. எனக்கு கிரேடு 1 மார்பக புற்றுநோய் இருப்பதாக பெற்றோரிடம் சொல்லும் தைரியம் எனக்கு கிடைத்தது. சிகிச்சைக்கு பின் தற்போது நான் நன்றாக குணமடைந்து வருகிறேன். விரைவில் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்புவேன்' என பதிவிட்டுள்ளார்.

SCROLL FOR NEXT