இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் நடிகர் சிலம்பரசன் நடித்து வரும் படம் ‘அரசன்’. இப்படம் ஒரு வடசென்னையில் நடக்கும் கேங்ஸ்டர் திரைப்படமாக உருவாகி வருகிறது.
இப்படத்தில், விஜய் சேதுபதி, சமுத்திரக்கனி, கிஷோர், பிரியங்கா மோகன், யோகி பாபு, ஆண்ட்ரியா, இயக்குநர் நெல்சன் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர். கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.
இப்படத்தை தீபாவளி பண்டிகைக்கு வெளியிட திட்டமிடப்பட்டு அதற்கான பணிகளும் நடைபெற்று வருகிறது. தற்போது ECR கடற்கரைப் பகுதியில் பிரம்மாண்டமான 'வடசென்னை' செட் ஒன்றை அமைத்துள்ளனர். இதில் நடிகர்கள் சிம்பு, விஜய் சேதுபதி மற்றும் அமீர் ஆகிய மூவரும் இணைந்து நடிக்கும் காட்சிகள் படப்பிடிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. முன்னதாக ரியங்கா மோகன் தொடர்பான காட்சிகள் படமாக்கப்பட்டது.
இதனிடையே, நடிகர் சிம்பு இப்படத்தில் இளமை மற்றும் முதுமை என 2 தோற்றத்தில் நடிப்பதாக கூறப்பட்ட நிலையில், தற்போது மூன்று கதாபாத்தரங்களில் நடிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி, ராஜன், அரசன், அன்பு ஆகிய கதாபாத்திரங்களில் சிம்பு நடித்து வருவதாக கூறப்படுகிறது.
இதனால் இந்த வருட தீபாவளி பண்டிகை சிம்பு ரசிகர்களுக்கு சரவெடியாக இருக்கும் என்று கருதப்படுகிறது.