மூக்குத்தி அம்மன் 2 பட நாயகி நயன்தாராவின் 60 அடி கட் கவுட் குறித்து சக நடிகை ரெஜினா நெகிழ்ந்துள்ளார்.
'மூக்குத்தி அம்மன்' படத்தின் வெற்றியை தொடர்ந்து ‘மூக்குத்தி அம்மன் 2’ உருவாகி உள்ளது.
சுந்தர் சி. இயக்கும் இரண்டாம் பாகத்தில் நயன்தாரா, ரெஜினா, துனியா விஜய், ஊர்வசி, சினேகா, யோகி பாபு, அபிநயா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல், அவினி சினிமேக்ஸ், நயன்ரதாரா, ஐவி என்டர்டெய்ன்மெண்டு இணைந்து தயாரித்துள்ள இப்படத்திற்கு ஹிப் ஹாப் ஆதி இசையமைத்துள்ளார்.
இப்படத்தின் டிரெய்லர் அண்மையில் வெளியாகி இருந்தது. டிரெய்லரில் நயன்தாரா பயந்த சுபாவம் கொண்ட பெண் போலீஸ் மற்றும் அம்மனாக இருவேறு பரிணாமங்களில் நடித்துள்ளார்.
இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து பட வெளியீட்டிற்கான பணிகள் நடைபெற்று வருகிறது.
தீபாவளியை ஒட்டி நவம்பர் 6 ஆம் தேதி படம் வெளியாக உள்ளது.
இந்நிலையில் 'மூக்குத்தி அம்மன் 2' திரைப்படத்தின் விளம்பரங்களின் ஒரு பகுதியாக, நயன்தாராவின் 60 அடி உயர பிரம்மாண்டமான கட் அவுட் அமைக்கப்பட்டது.
சென்னை செம்பரம்பாக்கத்தில் உள்ள வேல்ஸ் திரையரங்கம் வளாகத்தில் இந்த கட் அவுட் வைக்கப்பட்டுள்ளது.
தனது சமூக வலைதளப் பக்கத்தில் இந்தக் கட் அவுட் புகைப்படத்தைப் பகிர்ந்த ரெஜினா, "ஒரு நடிகைக்காக இவ்வளவு பெரிய கட் அவுட் அமைக்கப்படுவது இதுவே முதல் முறையாக இருக்கலாம்.
இது நயன்தாராவின் மன உறுதிக்கும், வெற்றிக்கான அவரது அர்ப்பணிப்புக்கும் ஒரு சான்றாகும்" என்று நெகிழ்ந்துள்ளார் .