சினிமா செய்திகள்

கவினின் 'ஹாய்' படத்தின் மூன்றாவது சிங்கிள் 'பச்ச புள்ள' ப்ரோமோ பாடல் நாளை வெளியாகிறது!

ஹாய் படத்தின் புதிய அப்டேட்டை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்

இயக்குனர் விஷ்ணு எடவன் இயக்கத்தில், நடிகர் கவின் மற்றும் 'லேடி சூப்பர் ஸ்டார்' நயன்தாரா இணைந்து முதன்முறையாக நடிக்கும் திரைப்படம் 'ஹாய்'. இந்த திரைப்படம் ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இவர்களின் கெமிஸ்ட்ரி எப்படி இருக்க போகிறது என்ற எதிர்பார்ப்பும் அதிகமாக இருக்கிறது. தற்போது இந்த திரைப்படத்தின் புதிய அப்டேட்டை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

மூன்றாவது சிங்கிள்

ஏற்கனவே வெளியான பாடல்கள் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்று வந்த நிலையில், தற்போது இப்படத்தின் மூன்றாவது சிங்கிள் பாடலான 'பச்ச புள்ள' வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கான சிறப்பு விளம்பரப் பாடல் மற்றும் முழுப் பாடல் குறித்த அறிவிப்பு இந்த போஸ்டர் மூலம் வெளியாகியுள்ளது. ஜென் மார்ட்டின் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

படக்குழு

இயக்குனர் விஷ்ணு எடவன் இயக்கத்தில், விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாராவின் 'ரவுடி பிக்சர்ஸ்', எஸ்.எஸ். லலித் குமாரின் 'செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ' மற்றும் 'ஜீ ஸ்டுடியோஸ்' ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் 'ஹாய்' திரைப்படம் வருகிற ஆகஸ்ட் 14 அன்று உலகெங்கும் உள்ள திரையரங்குகளில் பிரம்மாண்டமாக வெளியாகிறது.

இவர்கள் இருவருக்குள் மலரும் மென்மையான காதல் கதையை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இத்திரைப்படத்தில் கவின், நயன்தாரா இவர்களுடன் பாக்யராஜ், ராதிகா சரத்குமார் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT