சினிமா செய்திகள்

அவர்கள் என் உணர்வுடன் கலந்தவர்கள்..!- இசையமைப்பாளர் இளையராஜா நெகிழ்ச்சி பதிவு

சதானந்தத்தின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்.

தமிழ் திரையிசை உலகில் இசைஞானி இளையராஜா குழுவின் மூத்த மற்றும் புகழ்பெற்ற முன்னணி கிதார் கலைஞரான எஸ். சதானந்தம் (சதா மாஸ்டர்), இன்று தனது 79ஆவது வயதில் காலமானார். 1947 ஆம் ஆண்டு செப்டம்பர் 30 அன்று பிறந்த இவர், முதுமை மற்றும் உடல்நலக் குறைவு காரணமாக மறைந்துள்ளார்.

இந்தநிலையில் இவரது மறைவுக்கு இசையமைப்பாளர் இளையராஜா தனது இரங்கலை வீடியோ வாயிலாக பதிவு செய்துள்ளார்.

அந்த வீடியோவில் அவர் கூறியிருப்பதாவது:-

ஆரம்பகாலத்தில் இருந்து நீண்ட நெடும் காலமாக என்னுடன் பணிபுரிந்த இசையமைப்பாளர் சுதர்சனமின் புதல்வன் சதானந்தம், இன்று காலமாகிவிட்டார் என்பதை அறிந்து மிகவும் துக்கம் அடைந்தேன்.

பொதுவாக காலமானவர்களை நான் இறந்த நிலையில் பார்ப்பது கிடையாது. அதை விரும்புவதும் இல்லை. ஏனென்றால் அவர்களெல்லாம் என் உயிருடன் வாழ்ந்தவர்கள்.

உணர்வுடன் கலந்தவர்கள். அதனால் சதானந்தத்தின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்.

இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

SCROLL FOR NEXT