சினிமா செய்திகள்

‘ஆதாரம் உள்ளது’: சீதையின் சண்டைக் காட்சி விமர்சனங்களுக்கு நிதேஷ் திவாரி பதில்!

அரச குடும்பங்களில் பிறந்த ஆண், பெண் பிள்ளைகள் அனைவருக்கும், ஏதோ ஒரு மட்டத்தில், கலைகளிலும், ஆயுதங்களிலும் பயிற்சி அளிக்கப்பட்டிருந்தது.

ராமாயணா படத்தில் சீதை கதாபாத்திரம் தைரியமாக காட்டப்பட்ட விதம் பலரிடையை பாராட்டுகளை பெற்றநிலையில், சிலரிடையே விமர்சனத்தை பெற்றது.

குறிப்பாக பாலிவுட் பிரபலங்கள் பலர் சீதை சண்டையிடுவது போன்ற காட்சிகள் எந்த வரலாற்றிலும் இல்லை என்றும், கதை அமைப்புக்காக அவரின் கதாபாத்திர அம்சத்தை மாற்றுவது சரியானது அல்ல எனவும் தெரிவித்திருந்தனர்.

மேலும் ராவணனின் குணாதிசயங்களும் மாற்றி காட்டப்பட்டதாக விமர்சித்திருந்தனர்.

இந்நிலையில் சீதையை போர்வீராங்கனையாக காட்டியதற்கு இலக்கிய ஆதாரங்கள் இருப்பதாக இயக்குநர் நிதேஷ் திவாரி தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக பேசியுள்ள அவர்.,

“இந்தக் கதைகள் சீதையின் முற்றிலும் மாறுபட்ட ஒரு வடிவத்தை அளிக்கின்றன: அவள் வெறும் சகிப்புத்தன்மையின் உருவமாக மட்டுமல்லாமல், ஒரு செயல்மிகு வீராங்கனையாகவும், பிரபஞ்ச சக்தியின் வடிவமாகவும் திகழ்கிறாள்.

இந்தக் கதைகளில், ராமர் செயலற்றுப் போகும்போது, ​​அவள் மகாகாளியின் உக்கிரமான வடிவத்தை எடுத்து, ஆயிரம் தலை அசுர அரசனான சகஸ்ர ராவணனைக் கொல்கிறாள்.

சீதையை ஒரு வீராங்கனையாகச் சித்தரிப்பதை நவீன பெண்ணியக் கண்ணோட்டத்தில் மட்டும் பார்க்கக்கூடாது. திரையரங்க அனுபவத்தை ரசித்து மகிழுங்கள்.

மேலும், அந்தக் காலங்களில் கலாச்சாரம் இருந்த விதத்தை நீங்கள் உற்று நோக்கினால், அரச குடும்பங்களில் பிறந்த ஆண், பெண் பிள்ளைகள் அனைவருக்கும், ஏதோ ஒரு மட்டத்தில், கலைகளிலும், ஆயுதங்களிலும் பயிற்சி அளிக்கப்பட்டிருந்தது.

ஆகவே, சீதையும் போர்க்கலையில் நன்கு பயிற்சி பெற்றிருந்திருக்கலாம் என்று நினைப்பது அவ்வளவு விசித்திரமானதோ அல்லது நம்பமுடியாததோ அல்ல.

குறிப்பாக, ஒரு பெண்ணாக நீங்கள் அதுபோன்ற ஒரு சூழ்நிலையில் தள்ளப்படும்போது, ​​நீங்கள் ஒரு உதவியற்ற பெண்ணாக இருக்க மாட்டீர்கள் என்றுதான் நான் சொல்வேன்.” எனக் குறிப்பிட்டுள்ளார்.

ராமாயணம்

நம்மில் பெரும்பாலானோருக்கு வால்மீகியின் ராமாயணம் குறித்தே தெரியும். ஆனால் இலக்கியத்தில் இன்னும் பல ராமாயண படைப்புகள் உள்ளன.

அத்புத ராமாயணம் போன்ற சில துணைப் புராணங்களில், ராவணனின் மூத்த சகோதரனாக 'சகஸ்ரமுக ராவணன்' என்ற பாத்திரம் குறிப்பிடப்படுகிறது. இவனுக்கு ஆயிரம் தலைகள் இருந்ததாகவும், இவனை சீதை காளி உருவெடுத்து வதம் செய்ததாகவும் கூறப்படுகிறது.

அதேப்போல ஒடியா மொழியில் எழுதப்பட்ட பிலங்கா ராமாயணமும் உள்ளது. இந்த புராணக் கதைகளில் எல்லாம் சீதை ஒரு தைரியமான பெண்ணாகவே சித்தரிக்கப்பட்டிருப்பார்.

ராமாயணா

நிதேஷ் திவாரி இயக்கத்தில் ரன்பீர் கபூர், சாய்பல்லவி, யஷ், ரவி துபே, ரகுல் ப்ரித் சிங் உள்ளிட்டோர் நடிப்பில், தீபாவளி பண்டிகையையொட்டி நவ.5ம் தேதி திரையரங்குகளில் வெளியானப் படம் ராமாயணா.

ரூ.1000 கோடி வசூலைத் தாண்டி வெற்றிக்கரமாக படம் ஓடிவருகிறது.

SCROLL FOR NEXT