சினிமா செய்திகள்

அதர்வா நடித்த DNA படத்தின் டிரெய்லர் வெளியானது

DNA படத்தை நெல்சன் வெங்கடேசன் இயக்கியுள்ளார். டிஎன்ஏ திரைப்படம் வரும் ஜூன் 20ம் தேதி வெளியாகவுள்ளது.

மாலை மலர்

அதர்வா நடிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் டிஎன்ஏ. இப்படத்தில் நிமிஷா சஜயன் கதாநாயகியாக நடித்துள்ளார்.

இப்படத்தை ஒரு நாள் கூத்து, மான்ஸ்டர், ஃபர்ஹானா போன்ற திரைப்படத்தை நெல்சன் வெங்கடேசன் இயக்கியுள்ளார்

டிஎன்ஏ திரைப்படம் வரும் ஜூன் 20ம் தேதி வெளியாகவுள்ள நிலையில், இப்படத்தின் ட்ரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது. விறுவிறுப்பான திரில்லர் படமாக இப்படம் அமைந்துள்ளது.

மேலும் இப்படத்தின் அனைத்து பாடல்களும் இன்று வெளியிடப்பட்டுள்ளன. படத்தில் இடம்பெற்ற 5 பாடல்களுக்கு 5 திறமையான இசையமைப்பாளர்கள் இசையமைத்துள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.