சினிமா செய்திகள்

"படை தலைவன்" புதிய ரிலீஸ் தேதியை அறவித்த படக்குழு

டிரைக்கடர்ஸ் சினிமாஸ் (Directors Cinemas) தயாரிக்கும் இப்படத்திற்கு இளையராஜா இசையமைத்துள்ளார்.படை தலைவன் படத்தின் டிரெய்லர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

மாலை மலர்

மறைந்த விஜய்காந்தின் மகனான சண்முக பாண்டியன், மதுரை வீரன் படத்தின் வெற்றிக்குப் பிறகு படை தலைவன் திரைப்படத்தில் நடித்துள்ளார்.

"வால்டர்", "ரேக்ளா" படத்தை இயக்கிய அன்பு இயக்கத்தில் உருவாகி இருக்கும் இப்படத்தில் கஸ்தூரி ராஜா, எம் எஸ் பாஸ்கர், யாமினி சந்தர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

டிரைக்கடர்ஸ் சினிமாஸ் (Directors Cinemas) தயாரிக்கும் இப்படத்திற்கு இளையராஜா இசையமைத்துள்ளார்.

புதுமையான திரைக்கதையில் முழுக்க முழுக்க காட்டுக்குள் நடக்கும் கதைக்களத்தில் பரபரப்பான திருப்பங்களுடன் இப்படத்தின் திரைக்கதை உருவாக்கப்பட்டுள்ளது.

படத்தின் முதல் பாடலான "உன் முகத்தை பார்க்கலையே" பாடலின் லிரிக் வீடியோ சில மாதங்களுக்கு முன் வெளியானது மற்றும் படத்தின் டிரெய்லர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

ஏற்கனவே திரைப்படத்தின் ரிலீஸ் தேதி பல முறை ஒத்திவைக்கப்பட்டிருந்த நிலையில், கடந்த மே மாதம் 23ம் தேதி படம் வெளியாக இருந்தது. ஆனால் திரையரங்கு ஒதுகீட்டு சிக்கல்களின் காரணமாக, பட ரிலீசை தற்காலிகமாக ஒத்திவைப்பதாகவும், படத்தின் புதிய ரிலீஸ் தேதியை விரைவில் அறிவிக்கப்படும் எனவும் படக்குழுவினர் அறிவித்தனர்.

இந்நிலையில், படை தலைவன் படம் வெளியாகும் தேதியை படக்குழு அறிவித்துள்ளது. அதன்படி, கேப்டன் சினி கிரியேஷன்ஸ் வரும் ஜூன் 13ம் தேதி படத்தை வெளியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.