மகாராஷ்டிராவின் பாரம்பரிய கோந்தல் சடங்கு மற்றும் நாட்டுப்புற கலைநிகழ்ச்சி மரபுகளைப் தழுவி எடுக்கப்பட்டு, கடந்த ஆண்டு திரையரங்குகளில் வெளியாகி வரவேற்பைப் பெற்ற மராத்தி மொழிப் படம் ‘கோந்தல்’.
சந்தோஷ் தவாகர் எழுதி, இயக்கியிருந்த இப்படத்திற்கு இளையராஜா இசையமைத்திருந்தார். இஷிதா தேஷ்முக், கிஷோர் கதம், யோகேஷ் சொஹோனி உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.
பல்வேறு விருதுகளையும், பாராட்டுகளையும் வென்ற இப்படம், 2027ஆம் ஆண்டிற்கான ஆஸ்கர் விருதுக்கும் இந்திய சார்பில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
இப்படம் தமிழ், மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் நவம்பர் 13ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்நிலையில் இப்படத்தின் தமிழ் டிரெய்லர் இன்று வெளியாகி உள்ளது.