சினிமா செய்திகள்

ரெட்ரோ படத்தின் `The One' பாடல் இன்று மாலை வெளியீடு

நடிகர் சூர்யா நடிக்கும் 44-வது திரைப்படம் 'ரெட்ரோ.'இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கும் இந்தப் படத்தில் பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடித்துள்ளார்.

நடிகர் சூர்யா நடிக்கும் 44-வது திரைப்படம் 'ரெட்ரோ.' இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கும் இந்தப் படத்தில் பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடித்துள்ளார்.

இந்த படத்தை சூர்யாவின் 2டி மற்றும் கார்த்திக் சுப்பராஜின் ஸ்டோன் பெஞ்ச் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளது. இந்தப் படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். ரெட்ரோ படம் வருகிற மே 1-ம் தேதி வெளியாகவுள்ளது.

ஏற்கனவே வெளியான இப்படத்தின் கண்ணாடி பூவே மற்றும் கனிமா பாடல்கள் மிகவும் வைரலான நிலையில், இப்படத்தின் அடுத்த பாடலான தி ஒன் பாடலை படக்குழு இன்று மாலை 5 மணிக்கு வெளியாகவுள்ளதாக படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது. இப்பாடலை விவேக் வரிகளில் சித்ஸ்ரீராம் மற்றும் ஷான் பாடியுள்ளார்.

ரெட்ரோ படத்திற்கான டப்பிங் பணிகளை சூர்யா முழுவதுமாக முடித்துள்ளார். படத்தின் இசை வெளியீட்டு விழா வரும் ஏப்ரல் 18 ஆம் தேதி சென்னையில் நடைப்பெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT