சினிமா செய்திகள்

‘சத்தியவான் சாவித்திரி’ படத்தின் சர்க்கரை பெண்ணே பாடல் வெளியானது!

படம் நவ.20ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

கீர்த்தி சுரேஷ் மற்றும் மிஷ்கின் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள சத்தியவான் சாவித்திரி படத்தின் ‘சர்க்கரை பெண்ணே’ பாடல் வெளியானது.

இயக்குநர் விஜய்யின் வரிகளுக்கு தீப்தி சுரேஷ், சாம் சிஎஸ் குரல் கொடுத்துள்ளனர்.

பிரவீன் எஸ். விஜய் இயக்கியுள்ள இப்படத்தில் இருவரும் வழக்கறிஞர் கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

தனது கணவருக்காக மிஷ்கினை எதிர்த்து கீர்த்தி சுரேஷ் வாதாடுவது போல கதைக்களம் அமைந்துள்ளது.

இவர்களுடன் பாலசரவணன், பாலாஜி சக்திவேல், ஆர். சுந்தர்ராஜன், ஹார்ட் பீட் புகழ் சாருகேஷ் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

படத்திற்கு சாம். சி.எஸ் இசையமைக்கிறார். ஜீ ஸ்டுடியோஸ் படத்தை தயாரித்துள்ளது. தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் நவ.20ம் தேதி படம் திரையரங்குகளில் வெளியாகிறது.

SCROLL FOR NEXT