ஆர்.ஜே.பாலஜி இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகி வரும் படம் கருப்பு. இப்படத்தின் சூர்யாவுக்கு ஜோடியாக த்ரிஷா நடித்துள்ளார். மேலும் ஸ்வாசிகா, ஷிவதா, இந்திரன்ஸ், யோகிபாபு எனப் பலர் நடித்துள்ளனர். படத்திற்கு சாய் அப்யங்கர் இசையமைத்துள்ளார்.
இந்தப் படத்தின் டீசர் சூர்யா பிறந்தநாளான கடந்த ஆண்டு ஜூலை 23ஆம் தேதி வெளியானது. அதனைத்தொடர்ந்து படத்தின் முதல் பாடல் அக்டோபரில் வெளியானது. இதனையடுத்து கடந்த மாதம் நாங்க நாலு பேரு என்ற இரண்டாவது சிங்கிள் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது.
இந்நிலையில் இப்படத்தின் மூன்றாவது பாடலான `ராத்து ராசன்'-ஐ புத்தாண்டை முன்னிட்டு இன்று வெளியிட்டுள்ளது படக்குழு. இப்படம் மே.14ஆம் தேதி வெளியாக உள்ளது.