பாலாவின் இயக்கத்தில் அருண் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள படம் வணங்கான். இந்த படத்தின் நாயகியாக ரோஷினி பிரகாஷ் நடித்துள்ளார். இயக்குனர் மிஷ்கின் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். சமுத்திரக்கனி, சண்முக ராஜன், அருள்தாஸ் ஆகியோரும் இதில் நடித்துள்ளனர்.படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். திரைப்படம் வரும் ஜனவரி 10 ஆம் தேதி வெளியாகவுள்ளது. படத்தின் இசையை சாம் சி.எஸ் மேற்கொண்டுள்ளார்.
படத்தின் முதல் பாடலான இறை நூறு மற்றும் மௌனம் போலே பாடலின் லிரிக் வீடியோவை படக்குழு வெளியிட்டது. இப்பாடல் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
இதைத்தொடர்ந்து படத்தின் அடுத்த பாடலான முகிலின் மேலே வீடியோ பாடல் படக்குழு வெளியிட்டுள்ளது. இப்பாடலை செல்வமிரா வரிகளில் சைந்தவி பாடியுள்ளார்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.