சினிமா செய்திகள்

தகப்பன் படத்தின் ‘சொக்க வச்சாளே’ பாடல் வெளியானது!

படம் டிசம்பர் 24ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

நடிகர் ஜீவா நடிப்பில், லார்க் ஸ்டூடியோஸ் தயாரிப்பில், இயக்குநர் ரா. வெங்கட் இயக்கத்தில் உருவாகி வரும் ‘தகப்பன்’ திரைப்படத்திலிருந்து ‘சொக்க வச்சாளே’ எனும் இரண்டாவது பாடல் வெளியாகியுள்ளது.

மார்ஷல் ராபின்சன் படத்திற்கு இசையமைத்துள்ள நிலையில், மோகன் ராஜன் வரிகளுக்கு ஹரிசரண், சைந்தவி மற்றும் நாராயணன் ரவிசங்கர் ஆகியோர் இணைந்து குரல் கொடுத்துள்ளனர்.

மதுரை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளைப் பின்னணியாகக் கொண்டு, அப்பா – மகன் உறவு, குடும்பப் பாசம் மற்றும் மனித உணர்வுகளை மையமாகக் கொண்டு இப்படம் உருவாகியுள்ளது.

‘தெனாவட்டு’ படத்திற்குப் பிறகு முழுக்க முழுக்க கிராமத்துப் பின்னணியில் ஜீவா நடிக்கும் இப்படத்தில், ரஜிஷா விஜயன் கதாநாயகியாக நடிக்கிறார்.

படம் டிசம்பர் 24ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

SCROLL FOR NEXT