அறிமுக இயக்குநர் ஆர்.கார்த்திகேயன் இயக்கத்தில் நடிகர்கள் அசோக் செல்வன் மற்றும் ப்ரீத்தி முகுந்தன் நடிப்பில் உருவாகியுள்ள காதல் திரைப்படம் அன்பில் அவன்.
ஐங்கரன் இன்டர்நேஷனல், ஹேப்பி ஹை பிக்சர்ஸ் இணைந்து தயாரித்துள்ள இப்படத்திற்கு கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ளார். இப்படம் செப்.25ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
சமீபத்தில் இப்படத்தின் முதல் பாடல் ஆசை வரமே வெளியாகி வரவேற்பை பெற்றது.
இந்நிலையில் இன்று இப்படத்தின் இரண்டாவது பாடல் ‘கல்லா நிக்கிறியே’ வெளியாகி உள்ளது. கார்த்திக் நேதா வரிகளில் உருவாகி உள்ளப் பாடலை சித் ஸ்ரீராம் பாடியுள்ளார்.