சினிமா செய்திகள்

Love Marriage படத்தின் செகண்ட் சிங்கிள் இன்று மாலை வெளியீடு

அறிமுக இயக்குநர் சண்முக பிரியன் இயக்கத்தில் விக்ரம் பிரபு நடிக்கும் புதிய படம் `லவ் மேரேஜ்’இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி மக்களின் கவனத்தை பெற்றது.

மாலை மலர்

அறிமுக இயக்குநர் சண்முக பிரியன் இயக்கத்தில் விக்ரம் பிரபு நடிக்கும் புதிய படத்திற்கு 'லவ் மேரேஜ்' என்று பெயரிட்டுள்ளனர்.

இப்படத்தில் விக்ரம் பிரபுவுக்கு ஜோடியாக சுஷ்மிதா பட் நடிக்கிறார். மேலும் இவர்களுடன் மீனாட்சி தினேஷ், ரமேஷ் திலக், அருள்தாஸ், கஜராஜ், முருகானந்தம் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். சிறப்புத் தோற்றத்தில் சத்யராஜ் நடித்திருக்கிறார்.

இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி மக்களின் கவனத்தை பெற்றது. படத்தின் முதல் பாடலான கல்யாண கலவரம் ஷான் ரோல்டன் இசையில் படக்குழு அண்மையில் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் படத்தின் செகண்ட் சிங்கிளான பெஜாரா ஆனேன் பாடலை படக்குழு இன்று மாலை 5 மணிக்கு வெளியாகிறது. இப்பாடலை மோகன் ராஜன் வரிகளில் ஷிவாங்கி பாடியுள்ளார். திரைப்படம் அடுத்த மாதம் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

திருமணம் தாமதமாவதால் ஒருவர், குடும்பத்திலும் சமூகத்திலும் எதிர்கொள்ளும் பிரச்சினை மற்றும் சிக்கல்களைப் பேசும் படமாக இப்படம் உருவாகியுள்ளது.