சினிமா செய்திகள்

ராமாயணா படத்தின் ‘புது ஜோடி’ பாடல் வெளியானது!

படம் நவ.5ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

நிதேஷ் திவாரி இயக்கத்தில் ரன்பீர் கபூர், சாய் பல்லவி, ரவி துபே, ரகுல் ப்ரீத் சிங், யாஷ் உள்ளிட்டோர் நடிப்பில், இந்துக்களின் இதிகாச புராணங்களில் ஒன்றான ராமாயணத்தை தழுவி எடுக்கப்பட்டுள்ளப் படம் ‘ராமாயணா’.

நமித் மல்ஹோத்ரா தயாரிப்பில் உருவாகியுள்ள இப்படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான், ஹாலிவுட் புகழ் ஹான்ஸ் ஜிம்மர் இசையமைத்துள்ளனர்.

இரண்டு பாகங்களாக உருவாகி உள்ள இப்படத்தின் முதல் பாகம், வரவுள்ள தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நவ.5ம் தேதி தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி என பல்வேறு மொழிகளில் வெளியாகிறது.

இதன் இரண்டாம் பாகம் அடுத்தாண்டு தீபாவளிக்கு வெளியாகிறது. இந்நிலையில் இப்படத்தின் புது ஜோடி பாடல் வெளியாகி உள்ளது.

SCROLL FOR NEXT