'கான்ஜூரிங் கண்ணப்பன்' படத்தை இயக்கிய செல்வின் ராஜ் சேவியர் எழுத்து மற்றும் இயக்கத்தில் சந்தானம் நடிக்கும் புதிய படத்திற்கு லவ் பைட் எனப் பெயரிடப்பட்டுள்ளது. ஏஜிஎஸ் நிறுவனம் சார்பில் கல்பாத்தி குழுமத்தினர் படத்தை தயாரிக்கின்றனர்.
சந்தானத்துடன் நடிகர்கள் ஆன்ந்த் ராஜ், மொட்டை ராஜேந்திரன், அபர்ணாதாஸ் ஆகியோர் படத்தில் நடிக்கின்றனர். படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் தொடங்கப்பட்ட நிலையில், அதன் புரோமோ வீடியோ வெளியாகி உள்ளது.
அதன்படி படம் ஜாம்பியை அடிப்படையாக கொண்டு எடுக்கப்படும், காமெடி த்ரில்லர் என உறுதியாகி உள்ளது.