சினிமா செய்திகள்

அஜித்குமாரை சந்தித்து பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த 'குட் பேட் அக்லி' படத்தின் தயாரிப்பாளர்கள்

அஜித்தின் அடுத்த படமான ஏகே 63 படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கவுள்ளார்இப்படத்திற்கு 'குட் பேட் அக்லி' என்ற பெயர் வைக்கப்பட்டுள்ளது

அஜித்தின் அடுத்த படமான ஏகே 63 படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கவுள்ளார். இப்படத்திற்கு 'குட் பேட் அக்லி' என்ற பெயர் வைக்கப்பட்டுள்ளது.

தேவிஸ்ரீ பிரசாத் இசையமைக்கும் இப்படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்கின்றனர். படம் 2025-ஆம் ஆண்டு பொங்கல் தினத்தில் வெளியிடப்படுகிறது.

இந்நிலையில், நடிகர் அஜித்குமாரை சந்தித்து இப்படத்தின் தயாரிப்பாளர்கள் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பான புகைப்படங்களை படக்குழு பகிர்ந்துள்ளது.

உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.