சினிமா செய்திகள்

‘டோரதி’ படத்தின் முதல் பாடல் நாளை வெளியீடு!

படம் செப்.25ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

கார்த்திக் சுப்பராஜ் இயக்கும் 10வது திரைப்படம் டோரதி. கீர்த்தி சுரேஷ், சனந்த், ரிஷிகாந்த் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள இப்படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைத்துள்ளார்.

கார்த்திக் சுப்பராஜின் தம்மம் ஃபிலிம்ஸ், ஜியோ ஸ்டுடியோஸ், சிக்யா என்டர்டெயின்மென்ட் இணைந்து படத்தை தயாரித்துள்ளன. இப்படம் செப்.25ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

இந்நிலையில் இப்படத்தின் முதல் பாடலான கல்யாண விருந்து நாளை வெளியாகும் என இயக்குநர் சுப்பராஜ் தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT