‘பம்பர்’ திரைப்படத்தை இயக்கிய எம். செல்வக்குமார் இயக்கத்தில் அருள்நிதி நடித்துள்ளப் புதிய படம் வேட்ட சாமி. இப்படத்தில் அமீர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
அருள்நிதி மற்றும் அமீருடன் இணைந்து ஆடுகளம் நரேன், மதுசூதன் ராவ், ஹரீஷ் பேரடி, விஜி சந்திரசேகர், இந்துமதி மணிகண்டன், மைனா நந்தினி உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
‘7 மைல்ஸ் பெர் செகண்ட்’ நிறுவனம் தயாரித்துள்ளப் படத்திற்கு, ஜிப்ரான் இசையமைத்துள்ளார்.
திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து, இறுதிக்கட்டப் பணிகள் நடந்து வரும் நிலையில், விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், படத்தின் முதல் பாடலான 'சாமி அழைப்பு' லிரிக்கல் வீடியோ வெளியாகியுள்ளது. வில்லுப்பாட்டு மாதவி குரலில், மு.ஜெகன் கவிராஜ் வரிகளில் வெளியாகி உள்ளது.