சினிமா செய்திகள்

அபிஷன் ஜீவிந்த் குரலில் நாளை மறுநாள் வெளியாகிறது ‘பிக்காசோ’ முதல் பாடல்!

படத்திற்கு லியோன் ஜேம்ஸ் இசையமைத்துள்ளார்.

கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ் குமார், டூரிஸ்ட் ஃபேமிலி புகழ் அபிஷன் ஜீவிந்த் இணைந்து நடிக்கும் ‘பிக்காசோ’ படத்தின் முதல் பாடல் நாளை மறுநாள் (நவ.27) வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

இப்பாடலை படத்தின் நாயகன் அபிஷனே பாடியுள்ளார். அறிமுக இயக்குநர் கௌதம் சிவராமன் எழுத்து, இயக்கத்தில் உருவாகும் இப்படத்திற்கு லியோன் ஜேம்ஸ் இசையமைக்கிறார்.

சிவராஜ் குமார், அபிஷன் உடன் இணைந்து யோகலட்சுமி, சிவானி நாகரம் மற்றும் கானா வினோத் ஆகியோரும் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

டிராமா கம்பெனி பேனரின் கீழ் ஏ. பாலமுருகன் இப்படத்தைத் தயாரிக்கிறார். படம் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

SCROLL FOR NEXT