சினிமா செய்திகள்

அரங்கம் நிறைந்த ரசிகர்களுடன் 'கருப்பு' படத்தை கொண்டாடிய படக்குழு!

கருப்பு திரைப்படம் இன்று காலை 9 மணிக்கு அதிகாரபூர்வமாக வெளியானது.

ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில், சாய் அபயங்கர் இசையமைப்பில் சூர்யா நடித்த 'கருப்பு' படத்தின் படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்த நிலையில் மே 14-ஆம் தேதி வெளியாகும் என்று அதிகாரப்பூர்வ பக்கத்தில் படக்குழு நிறுவனம் வெளியிட்டது.

இதைத்தொடர்ந்து நேற்று மே 14 ஆம் தேதிக்கு ரசிகர்கள் அனைவரும் காலை 9 மணி ஷோக்கு புக் செய்து பேனர்கள் வைத்தும் உற்சாகமாக கொண்டாட இருந்தனர்.

நேற்று ரிலீஸ் ஆக இருந்த 'கருப்பு' படம் சில காரணங்களால் வெளியிடவில்லை. ரசிகர்களும் படக்குழுவினரும் ஏமாற்றம் அடைந்தனர்.

இயக்குனர் ஆர்.ஜே பாலாஜி கண்ணீர் மல்க வீடியோ ஒன்றை வெளிட்டிருந்தார். அந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகின. மேலும் இந்த படத்திற்கு ஏற்பட்ட சிக்கலின் போது தனுஷ், ஜி.வி. பிரகாஷ் போன்ற திரை பிரபலங்கள் நடிகர் சூர்யாவிற்கும் படக்குழுவினருக்காக குரல் கொடுத்து வந்தனர்.

கடைசி நிமிடத்தில் ஏமாற்றம் அடைந்து, அனைத்து விதமான பிரச்சனைகளும் சுமுகமாக தீர்க்கப்பட்ட நிலையில், கருப்பு திரைப்படம் இன்று காலை 9 மணிக்கு அதிகாரபூர்வமாக வெளியானது.

'கருப்பு' படத்தின் படக்குழுவினர், ஆர்.ஜே பாலாஜி, நடிகை திரிஷா, சாய் அபயங்கர் மற்றும் நடிகர் கார்த்திக் ஆகியோர் சென்னையில் உள்ள பிரபல ரோகினி தியேட்டரில் நேரில் சென்று கண்டு மகிழ்ந்தனர்.

அவர்களுக்கு ரசிகர்கள் பட்டாசுகளை வெடித்தும், மேலத்தளங்களுடன் வரவேற்றனர்.

படம் முடிந்த பிறகும் படக்குழுவினர் தியேட்டரில் திரண்டிருந்த ரசிகர்களைச் சந்தித்துப் பேசி, அவர்களின் ஆரவாரமான வரவேற்பைப் பெற்று தங்களது மகிழ்ச்சியையும் பகிர்ந்து கொண்டனர்.