சினிமா செய்திகள்

விமல் பிறந்தநாளை கொண்டாடிய `சார்' படக்குழு

போஸ் வெங்கட் தற்பொழுது விமல் நடிப்பில் சார் என்ற படத்தை இயக்கியுள்ளார்.படத்தின் டீசர் மற்றும் இரண்டு பாடல்கள் சமீபத்தில் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

மாலை மலர்

சின்ன திரையில் அறிமுகமாகி பின் பல படங்களில் குணசித்திர நடிகராக நடித்து இருக்கிறார் போஸ் வெங்கட். பின் 2020 ஆம் ஆண்டு கன்னி மாடம் படத்தை இயக்கி தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமாகினார். தற்பொழுது அவர் விமல் நடிப்பில் சார் என்ற படத்தை இயக்கியுள்ளார்.

இப்படத்தை வெற்றிமாறனின் கிராஸ் ரூட் பிலிம்ஸ் வழங்குகிறது. திரைப்படம் விரைவில் வெளியாகவுள்ளது. இன்று பிறந்தநாள் கொண்டாடும் நடிகர் விமலுக்கு கேக் வெட்டி படக்குழு கொண்டாடினர். இதையொட்டி பிறந்தநாள் வாழ்த்து கூறி போஸ்டர் வெளியிட்டுள்ளனர்.

படத்தின் டீசர் மற்றும் இரண்டு பாடல்கள் சமீபத்தில் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. திரைப்படம் செப்டம்பர் மாதம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.