சினிமா செய்திகள்

ஆண்ட்ரியாவிற்கு பிறந்தநாள் வாழ்த்து கூறிய பிசாசு 2 படக்குழு

மிஷ்கின் இயக்கத்தில் கடந்த 2014-ம் ஆண்டு வெளிவந்து வெற்றிகரமாக ஓடிய படம், 'பிசாசு.' 'பிசாசு' படத்தின் இரண்டாம் பாகம் தற்போது தயாராகி உள்ளது.

மாலை மலர்

மிஷ்கின் இயக்கத்தில் கடந்த 2014-ம் ஆண்டு வெளிவந்து வெற்றிகரமாக ஓடிய படம், 'பிசாசு.' அந்த படத்துக்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து, 'பிசாசு' படத்தின் இரண்டாம் பாகம் தற்போது தயாராகி உள்ளது. இந்த படத்தையும் மிஷ்கினே இயக்கி உள்ளார். நடிகை ஆண்ட்ரியா முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள இப்படத்தில், நடிகர் விஜய் சேதுபதி, கவுரவ வேடத்தில் நடித்துள்ளார்.

ராக்ஃபோர்ட் எண்டர்டெயின்மெண்ட் சார்பில் முருகானந்தம் தயாரிக்கும் இப்படத்திற்கு கார்த்திக் ராஜா இசையமைத்துள்ளார். ஏற்கனவே கூறப்பட்ட வெளியீட்டு தேதியில் திரைப்படத்தை படக்குழுவால் வெளியிட முடியவில்லை. இந்நிலையில் இன்று தனது 39-வது பிறந்தநாளை கொண்டாடும் ஆண்ட்ரியாவிற்கு வாழ்த்துக் கூறி படக்குழு போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளது.

திரைப்படம் அடுத்தாண்டு மார்ச் மாதம் வெளியிடப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.