சினிமா செய்திகள்

20 ஆண்டுகளுக்கு பிறகு ஏப்.17-ல் மீண்டும் வெளியாகும் சீமானின் 'தம்பி'

போஸ்டரை ரசிகர்கள் இணையத்தில் வைரலாக்கி வருகின்றனர்.

கடந்த 2006-ம் ஆண்டு மாதவன், பூஜா, மணிவண்ணன் உள்பட பலர் நடிப்பில் வெளியான நடிகரும், இயக்குநருமான சீமான் இயக்கத்தில் உருவான இப்படம் ரசிகர்களிடையே வரவேற்பு பெற்று வசூலையும் குவித்தது.

இதனிடையே, 20 ஆண்டுகளுக்கு பிறகு ‘தம்பி’ படம் மீண்டும் வெளியாக உள்ளதாக தகவல்கள் வெளியானது. தேதி குறித்த அறிவிப்பு வெளியாகவில்லை.

இந்த நிலையில், உத்தாரா புரொக்ஷன்ஸ் சார்பில் ஹரி உத்தாரா ‘தம்பி’ படத்தை வெளியிடுகிறார். அதன்படி ‘தம்பி’ படம் அடுத்த மாதம் 17-ந்தேதி முதல் திரையரங்குகளில் மீண்டும் வெளியாக உள்ளது. இதுதொடர்பான போஸ்டரை ரசிகர்கள் இணையத்தில் வைரலாக்கி வருகின்றனர்.

தமிழில் வெளியாகி வெற்றி பெற்ற முன்னணி நடிகர்களின் படங்களை டிஜிட்டலில் புதுப்பித்து மீண்டும் ரிலீஸ் செய்து வருகிறார்கள். அந்த வரிசையில் ‘தம்பி’ படமும் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT