சினிமா செய்திகள்

75 நாட்களை கடந்து தாய் கிழவி சாதனை.. தியேட்டர் வசூல் மட்டும் எவ்வளவு தெரியுமா?

தியேட்டர் மட்டுமல்லாமல் ஓடிடியிலும் வரவேற்பை பெற்றது.

சிவகார்த்திகேயன் தயாரிப்பில் ராதிகா நடித்துள்ள புதிய படம் 'தாய் கிழவி'. இந்தப் படத்தை அறிமுக இயக்குநர் சிவகுமார் முருகேசன் இயக்கியுள்ளார்.

நிவாஸ் கே. பிரசன்னா இசையமைத்துள்ள இப்படத்தில் சிங்கம் புலி, அருள்தாஸ், பாலசரவணன், முனிஷ்காந்த், இளவரசு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

கடந்த பிப்ரவரி 27 ஆம் தேதி வெளியான இப்படம் 75 நாட்களுக்கும் மேலாக ஓடி, சாதனை படைத்துள்ளது. தியேட்டர் மட்டுமல்லாமல் ஓடிடியிலும் வரவேற்பை பெற்றது.

இந்நிலையில் இப்படம் உலகளவில் செய்துள்ள வசூல் குறித்த அறிவிப்பு. அதன்படி, இப்படம் 75 நாட்களில் ரூ.90 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளது.