சினிமா செய்திகள்

Thaai Kizhavi | 25 நாட்களை கடந்த தாய் கிழவி... கூடவே வசூல் அப்டேட் கொடுத்த படக்குழு

தாய் கிழவி படத்திற்கு நிவாஸ் கே. பிரசன்னா இசையமைத்துள்ளார்.

மாலை மலர்

சிவகார்த்திகேயன் தயாரிப்பில் ராதிகா நடித்துள்ள புதிய படம் 'தாய் கிழவி'. இந்தப் படத்தை அறிமுக இயக்குநர் சிவகுமார் முருகேசன் இயக்கியுள்ளார். நிவாஸ் கே. பிரசன்னா இசையமைத்துள்ள இந்தப் படத்தில் சிங்கம் புலி, அருள்தாஸ், பாலசரவணன், முனிஷ்காந்த், இளவரசு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான நிலையில், தாய் கிழவி படத்திற்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்தது. வசூல் ரீதியிலும் இந்தப் படம் வெற்றி பெற்றுள்ளது. தாய் கிழவி படத்தை பார்த்துவிட்டு ரசிகர்கள், பிரபலங்கள் பாராட்டு தெரிவித்தனர். இந்தப் படம் வெளியான சில நாட்களில் ரூ. 50 கோடிக்கும் அதிக வசூல் செய்தது.

இந்த நிலையில், தாய் கிழவி திரைப்படம் வெளியான 25 நாட்களில் ரூ. 75 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளது. இதனை படக்குழு சிறப்பு போஸ்டர் வெளியிட்டு தெரிவித்துள்ளது. வசூலுடன் சேர்த்து இந்தப் படம் திரையரங்குகளில் 25 நாட்களை நிறைவு செய்துள்ளதையும் படக்குழு போஸ்டரில் குறிப்பிட்டுள்ளது.