சினிமா செய்திகள்

விஜய் சேதுபதி நடிக்கும் மிஷ்கினின் ‘ட்ரெயின்’ டீசர், இசை வெளியீடு அப்டேட்

ஸ்ருதி ஹாசன் குரலில் 'கன்னகுழிக்காரா' என்ற பாடல் அண்மையில் வெளியாகி கவனம் பெற்றது.

ஸ்ருதி ஹாசன், நாசர், நரேன், கே.எஸ். ரவிக்குமார் மற்றும் பலர் நடித்துள்ள இப்படத்தை கலைப்புலி எஸ்.தாணு தயாரித்துள்ளார்.

மிஷ்கினின் விறுவிறுப்பான திரைக்கதையுடன் ஒரே இரவில் ரெயிலில் நடைபெறும் சம்பவங்களை மையமாக கொண்டு டார்க் திரில்லராக ட்ரெயின் உருவாகியுள்ளது.

இந்த படத்திற்கு இயக்குநர் மிஷ்கினே இசையமைத்துள்ளார். மேலும் நடிகை ஸ்ருதி ஹாசன் குரலில் 'கன்னகுழிக்காரா' என்ற பாடல் அண்மையில் வெளியாகி கவனம் பெற்றது.

படத்தின் படபிடிப்பு ஏற்கனவே நிறைவடைந்த நிலையில் படத்தின் டீசர் மற்றும் இசை வெளியீடு குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது.

விஜய் சேதுபதி தனது எக்ஸ் பக்கத்தில், விரைவில் டீசர் மற்றும் இசை வெளியீடு குறித்து அறிவிப்பு வெளியாகும் என்ற வீடியோ போஸ்டரை வெளியிட்டுள்ளார். எனவே ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.