சினிமா செய்திகள்

நிவின் பாலியின் ' விஜயம்' படத்தின் டீசர் வெளியானது!

பைக் ரேஸராக நிவின் பாலி மிரட்டும் 'விஜயம்' பட டீசர் வெளியீடு!

அல்போன்ஸ் புத்திரன் இயக்கி, நிவின் பாலி நடித்துள்ள விஜயம் திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு டீசர் வெளியாகியுள்ளது. இப்படத்தில் நிவின் பாலி பைக் ரேஸராக மிரட்டலான கதாபாத்திரத்தில் நடித்துள்ளதாக தெரிகிறது.

இப்படத்தில் நிவின் பாலியுடன் இணைந்து மமிதா பைஜு, ஆர்ஷா சாந்தினி பைஜு, வினய் ஃபோர்ட், ஜாஃபர் இடுக்கி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இத்திரைப்படத்திற்கு மிதுன் முகுந்தன் இசையமைத்துள்ளார். நிவின் பாலியின் சொந்த தயாரிப்பு நிறுவனமான பாலி ஜூனிவர் பிக்சர்ஸ் சினேஹோலிக்ஸ் நிறுவனத்துடன் இணைந்து மிக பிரம்மாண்டமாக இப்படத்தைத் தயாரித்துள்ளது.

நிவின் பாலியின் 50-வது மைல்கல் படமாக உருவாகும் இத்திரைப்படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

SCROLL FOR NEXT